காஞ்சீபுரத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை சாவு


காஞ்சீபுரத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை சாவு
x
தினத்தந்தி 11 Oct 2019 3:30 AM IST (Updated: 11 Oct 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது.

காஞ்சீபுரம்,

சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் ஆரிமுத்து. இவரது மனைவி சவுமியா. இவர்களது மகள் ரிஷிதா (வயது 1). ஆரிமுத்து குடும்பத்தினருடன் காஞ்சீபுரத்தை அடுத்த விநாயகபுரத்தில் உள்ள தனியார் அரிசி ஆலையில் தங்கி அங்கு வேலை செய்து வந்தார்.

குழந்தை ரிஷிதா அங்குள்ள தண்ணீர் தொட்டி படிக்கட்டுகளில் ஏறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டது.

குழந்தையின் சத்தம் கேட்ட அங்கு இருந்தவர்கள் குழந்தை ரிஷிதாவை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story