திருவொற்றியூரில் 4 மாணவர்கள் பலி எதிரொலி கடலில் குளிக்க போலீசார் தடை எச்சரிக்கை பலகை வைத்தனர்


திருவொற்றியூரில் 4 மாணவர்கள் பலி எதிரொலி கடலில் குளிக்க போலீசார் தடை எச்சரிக்கை பலகை வைத்தனர்
x
தினத்தந்தி 11 Oct 2019 2:04 AM IST (Updated: 11 Oct 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் 4 மாணவர்கள் பலி எதிரொலியால் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள கே.வி.கே.குப்பம், ஒண்டிகுப்பம், திருச்சிணாங்குப்பம், கடற்கரை பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடலில் குளிக்கும்போது கடல் அலையின் சீற்றத்தால் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் கடற்கரையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். இதில் 3 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. ஒரு மாணவரின் உடல் மட்டும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சமீப காலமாக திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளை தடுப்பதற்காக போலீசார், திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம், ஒண்டிகுப்பம், திருச்சிணாகுப்பம் ஆகிய கடற்கரை பகுதிகளில் கடலில் குளிக்க தடை விதித்து உள்ளனர்.

மேலும் அந்த பகுதிகளில் இது தொடர்பான எச்சரிக்கை பலகையையும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் திருவொற்றியூர் போலீசார் வைத்தனர். அந்த பலகையில் சமீபத்தில் எத்தனை பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் போலீஸ் உதவி கமிஷனர் சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் உள்பட போலீசார் கலந்துகொண்டனர்.

Next Story