மானாமதுரை அருகே, 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்
மானாமதுரை அருகே 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கும்பலில் 2 பேர் சிக்கியுள்ளனர்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியுடன் விஷ்வா (வயது 20) என்பவர் நெருக்கமாக பழக்கமாகி உள்ளார். அவர் மாணவியுடன் எடுத்துக் கொண்ட நெருக்கமான படத்தை தனது நண்பர்களான கவியரசன் (22), அருண்பாண்டி (21) உள்ளிட்ட சிலருக்கு அனுப்பி உள்ளார்.இதைத் தொடர்ந்து கவியரசன், அருண்பாண்டி ஆகியோர் அந்த படத்தை காண்பித்து மிரட்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். மேலும் சிலர் அந்த படத்தை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்ய மாணவியை மிரட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இது குறித்து அவளது தாய் கேட்டுள்ளார். அப்போது தனக்கு நடந்த கொடுமை குறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து விஷ்வாவின் நண்பர்கள் கவியரசன், அருண்பாண்டி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மானாமதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story