பற்பசை என்று நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய மாணவன் சாவு


பற்பசை என்று நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய மாணவன் சாவு
x
தினத்தந்தி 11 Oct 2019 4:00 AM IST (Updated: 11 Oct 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே பற்பசை என்று நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த கோனலூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதன் மகன் ஸ்ரீராம் (வயது 13). திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று ஸ்ரீராம் பற்பசை என்று நினைத்து வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை எடுத்து பல் துலக்கினான். அப்போது எலி பேஸ்ட்டை விழுங்கி விட்டான். இதனால் ஸ்ரீராமுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மாணவன் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பற்பசை என்று நினைத்து எலி பேஸ்ட் கொண்டு பல் துலக்கிய மாணவன் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story