மாவட்ட செய்திகள்

திருப்பூரில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் ரேஷன் கடை - கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார் + "||" + Ration shop selling grocery in Tiruppur Collector K. Vijayakarthikeyan inaugurated

திருப்பூரில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் ரேஷன் கடை - கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்

திருப்பூரில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் ரேஷன் கடை - கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்
திருப்பூரில் மானிய விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் ரேஷன் கடையை கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.
திருப்பூர், 

திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் ஸ்ரீநகரில் மத்திய அரசின் உதவியுடன் விவசாயி ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் ஆதார் எண், ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஆகியவற்றை கொண்டு வந்து இந்த ரேஷன் கடையில் பதிவு செய்து அனைத்து மளிகை பொருட்களை மானிய விலையில் பெற முடியும். எந்த பகுதியில் உள்ள மக்களும் இந்த ரேஷன் கடையில் மளிகை பொருட்களை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ரேஷன் கடையின் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வாங்கி நன்மை பெறுவதே இந்த திட்டமாகும். இந்த விவசாயி ரேஷன் கடையின் முக்கிய நோக்கம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களையும் உற்பத்தி விலையிலேயே பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதாகும்.

இந்த ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படும். உழவர் பாதுகாப்புதிட்ட அட்டை பதிவு செய்யப்பட்டு தேவைக்கேற்ப பொருட்கள் மானிய விலையில் வாங்கிக்கொள்ளலாம். ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லாதவர்களும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். எனவே விவசாயிகளும், பொதுமக்களும் இந்த ரேஷன் கடையை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் ஆர்.டி.ஓ. கவிதா, வடக்கு தாசில்தார் ஜெயக்குமார், தமிழ்நாடு விவசாயி ரேஷன் கடை தலைவர் ஜெயகணேஷ், இயக்குனர் கிருஷ்ணன், துணை செயல் அதிகாரி கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.