வன உயிரின வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசு


வன உயிரின வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 11 Oct 2019 4:00 AM IST (Updated: 11 Oct 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

வன உயிரின வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா பரிசு வழங்கினார்.

ஈரோடு,

உலக வன உயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி வனத்துறை சார்பில், பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் வினாடி -வினா ஆகிய போட்டிகள் ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடந்தது.

பரிசு -சான்றிதழ்

விழாவுக்கு சத்தி புலிகள் காப்பகத்தின் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

இதில் ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஷ்மிஜூ விஸ்வநாதன், மாவட்ட கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன், வேளாளர் கல்லூரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் முதல்வர் மரகதம் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டார்கள்.


Next Story