7 ஆண்டுகளாக திறக்கப்படாத ரே‌ஷன் கடை தாசில்தாரிடம் கிராமத்தினர் மனு


7 ஆண்டுகளாக திறக்கப்படாத ரே‌ஷன் கடை தாசில்தாரிடம் கிராமத்தினர் மனு
x
தினத்தந்தி 12 Oct 2019 4:00 AM IST (Updated: 11 Oct 2019 7:02 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக கட்டியுள்ள ரே‌ஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி சாத்தூர் தாசில்தாரிடம் கிராமத்தினர் மனு கொடுத்தனர்.

சாத்தூர்,

சாத்தூர் அருகே சிந்துவம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாருகாபுரம் கிராமத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்த கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட ரே‌ஷன் கடை கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராமத்து மக்கள் பொருட்கள் வாங்க 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சிந்துவம்பட்டி கிராமத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே புதிதாக கட்டியுள்ள ரே‌ஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி சாத்தூர் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் நாருகாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர்தொட்டி பழுதடைந்து பல மாதங்களாகியும் சரி செய்யவில்லை எனவும் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடமும் இடிந்து விழும்நிலையில் உள்ளது என்றும் கண்மாய், ஓடைகளை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கிராமத்திற்கு 100 நாள் வேலை திட்டம் மூலம் சரிசெய்து தண்ணீர் பெறுக்க வழி செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சரோஜா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

Next Story