மாவட்ட செய்திகள்

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு செல்போனில் பேசியபோது பரிதாபம் + "||" + Slipped from the 3rd floor The death of the plaintiff

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு செல்போனில் பேசியபோது பரிதாபம்

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு செல்போனில் பேசியபோது பரிதாபம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை,

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்த்தவர் அருண் (வயது 23). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சுங்குவார்சத்திரத்தை அடுத்த ஜோதிநகர் விவேகானந்தா தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார். அவருடன் 5 பேர் தங்கி இருந்தனர்.


நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து திரும்பிய அவர் தான் தங்கியுள்ள வீட்டின் 3-வது மாடிக்கு சென்றார். அங்கு அவர் மது குடித்துள்ளார். இதற்கிடையே இரவு பணிக்கு செல்லும் முன்பு உடன் தங்கியிருந்தவர்கள் இவரை பார்க்க மாடிக்கு சென்றனர். அங்கு அருணை காணவில்லை. வீட்டிலும் இல்லை. அப்போது அவர் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை ஆன்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். குடிபோதையில் செல்போன் பேசியபோது 3-வது மாடியில் இருந்து அருண் தவறி விழுந்து இறந்தது விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் அருணுடன் தங்கியிருந்த அவரது நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.