மாவட்ட செய்திகள்

திருவாரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம் - கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார் + "||" + Thiruvarur Plastic eradication procession Collector Anand inaugurated flag

திருவாரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம் - கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருவாரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம் - கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
திருவாரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவாரூர், 

திருவாரூர் புதிய ரெயில் நிலையத்தில் இருந்து நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், இந்தியன் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்து கொண்டு பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

உணவகங்கள், தேநீர், விடுதிகளில் மற்றும் அனைத்துவிதமான கடைகளிலும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தவிர்க்க வேண்டும். பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணி பைகள், காகித உறைகள் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். திருவாரூர் ரெயில் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் பழைய பஸ் நிலையம், தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் இந்தியன் செஞ்சுலுவை சங்கத்தின் தலைவர் ராஜ்குமார், செயலாளர் வரதராஜன், நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் அண்ணாதுரை, பொதுச்செயலாளர் ரமே‌‌ஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூர் மாவட்டத்தில், நெல் கொள்முதல் ஊழியர்கள் 21 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் 21 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2. பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற்று பயன்பெறலாம் - கலெக்டர் தகவல்
பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3. திருநெய்ப்பேரில் பயிர் அறுவடை பரிசோதனை - கலெக்டர் பார்வையிட்டார்
திருநெய்ப்பேரில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெறுவதை கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டார்.
4. போதிய ஆவணங்கள் இன்றி நெல் கொள்முதல் செய்த ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் அதிரடி நடவடிக்கை
போதிய ஆவணங்கள் இன்றி நெல் கொள்முதல் செய்த ஊழியர்கள் 2 பேரை கலெக்டர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-