வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் கொள்ளை
திருவோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை- வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மூவர்ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகையன்(வயது39). சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 15 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
மறுநாள் காலை கண்விழித்து பார்த்த முருகையன் தனது வீட்டில் இருந்து நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து திருவோணம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story