மாவட்ட செய்திகள்

நடிகர் அமிதாப்பச்சனுக்கு 77-வது பிறந்தநாள் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து + "||" + For actor Amithappachan 77th birth day

நடிகர் அமிதாப்பச்சனுக்கு 77-வது பிறந்தநாள் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து

நடிகர் அமிதாப்பச்சனுக்கு 77-வது பிறந்தநாள் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து
நடிகர் அமிதாப்பச்சன் நேற்று தனது 77-வது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மும்பை,

சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இந்தி திரையுலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன்.

திவார், சன்சீர், சோலே மற்றும் மிஸ்டர் நட்வர்லால் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவரும், 4 தேசிய விருதுகளை பெற்றவருமான அமிதாப் பச்சனுக்கு நேற்று 77-வது வயது பிறந்தது. பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு இந்தி திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்தன.


நடிகர் ராஜ்குமார் ராவ் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், அமிதாப் பச்சன். நீங்கள் குரு துரோணாச்சாரியர். நாங்கள் அனைவரும் ஏகலைவன்கள். உங்களிடம் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளியுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதேபோல் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “வாழ்த்துகள் அமிதாப் பச்சன். நீங்கள் 100 வயதை கடந்தும் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதேபோல் நடிகை அனுஷ்கா ஷர்மா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அற்புதமான மற்றும் அதிசயமான மனிதராக திகழ்வதற்கு நன்றி. நீங்கள் உண்மையில் ஒரு மாபெரும் கலைஞர்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அனில் கபூர் கூறுகையில், “உங்களுடன் இணைந்து பணியாற்றியதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். உங்களின் வாழ்க்கையும், நீங்கள் வேலை மீது கொண்ட பற்றும் எங்களுக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும்” என்றார்.

இதேபோல் நடிகர்கள் பர்கான் அக்தர், அஜய் தேவ்கன், அனுபம் கேர், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.