மாவட்ட செய்திகள்

கடைகளில் பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர் + "||" + In stores The lock was broken and stolen 2 arrested including child

கடைகளில் பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்

கடைகளில் பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் பிடித்து கைது செய்தனர்.
திரு.வி.க.நகர்,

சென்னை புறநகர் பகுதிகளான செம்பியம், ராஜமங்களம், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த சில நாட்களாக பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போவதாகவும், 10-க்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை முயற்சி நடந்துவந்ததாகவும் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன.


அதன் பேரில், போலீஸ் அதிகாரிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அதில், 2 மர்மநபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து திருடுவது தெரியவந்தது. இதையடுத்து, செம்பியம் உதவி கமிஷனர் சுரேந்திரன் தலைமையில் திரு.வி.க. நகர் இன்ஸ்பெக்டர் சண்முகம் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து 2 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் கொளத்தூர் குமரன் நகரில் 2 பேரும் சுற்றித்திரிவது போலீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திரு.வி.க. நகர் சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் உள்ளிட்ட போலீசார் இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் பெரம்பூர் மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (வயது 21) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.1,000, 2 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், சுபாசை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை: கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சோதனையின் போது கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரதம் அபராதம் விதிக்கப்பட்டது.
2. தஞ்சையில் பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைப்பு
தஞ்சையில், பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
3. குலசேகரம் அருகே துணிகரம் ஒரே நாளில் 4 கடைகளில் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குலசேகரம் பகுதியில் ஒரே நாளில் 4 கடைகளில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.