காங்கேயத்தில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் வழங்கினார்
காங்கேயத்தில் நடந்த உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாமில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
காங்கேயம்,
காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், 5பேருக்கு ரூ.1லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான இயற்கை மரண நிவாரண உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித்தொகையும்,9 பேருக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகையும்,1 பயனாளிக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.2.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கி பேசினார் .
இந்த நிகழ்ச்சியில் காங்கேயம் தாசில்தார் புனிதவதி,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெய்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

Related Tags :
Next Story