மன்னார்குடியில் திராவிடர் கழக தெருமுனை கூட்டம்


மன்னார்குடியில் திராவிடர் கழக தெருமுனை கூட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2019 4:00 AM IST (Updated: 13 Oct 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை சந்திப்பு அருகே திராவிடர் கழக தெருமுனை கூட்டம் நடந்தது.

மன்னார்குடி,

மன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை சந்திப்பு அருகே திராவிடர் கழக தெருமுனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திராவிடர் கழக நகர செயலாளர் ராமதாசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் வீரையன், மாநில விவசாய அணி செயலாளர் கோபால், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் ரமே‌‌ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர தலைவர் அன்பழகன் வரவேற்றார். இதில் தலைமை பேச்சாளர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், ஒன்றிய தலைவர்கள் தமிழ்ச்செல்வம் (மன்னார்குடி ), பு‌‌ஷ்பநாதன் (கோட்டூர்), கணேசன் (நீடாமங்கலம்), ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story