மேலத்தாங்கல் கிராமத்தில் இலவச கண் மருத்துவ முகாம் - கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்


மேலத்தாங்கல் கிராமத்தில் இலவச கண் மருத்துவ முகாம் - கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:30 PM GMT (Updated: 12 Oct 2019 8:18 PM GMT)

மேலத்தாங்கல் கிராமத்தில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

சேத்துப்பட்டு, 

சேத்துப்பட்டை அடுத்த மேலத்தாங்கல் கிராமம் சூரஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாளையொட்டி இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை டாக்டர்கள் சுகந்தி, செந்தில்குமார், கிரிஸ்ராவ், அகிலா, சூரஜ் குழுமத்தின் இயக்குனர் சூரஜ்மால் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் அனுராதா வரவேற்றார்.

இதில், சிறப்பு விருந்தினராக கலெக்டர் கந்தசாமி கலந்துகொண்டு இலவச கண் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், ‘மாணவர்கள் தொலைக்காட்சி, விளையாட்டு, நண்பர்களுடன் சுற்றுவது போன்றவற்றை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், படிப்பிற்கு என்றும் மதிப்பு குறையாது. தன்னம்பிக்கையுடன் படித்தால் லட்சியத்தை அடையலாம்’ என்றார்.

முகாமில், பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், சேத்துப்பட்டு தாசில்தார் சுதாகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அரிதாஸ், பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யமூர்த்தி, ரேணுகோபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

Next Story