சங்ககிரி, எடப்பாடி, கெங்கவல்லி பகுதிகளில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்ககிரி,
சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் கலந்து கொண்டு பேசினார். பின்னர் கோரிக்கை மனுவை சங்ககிரி தாசில்தார் அலுவலகத்தில் கொடுத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்ட செயலாளர் சேகர், வட்ட பொருளாளர் பழனிசாமி, ஆறுமுகம், மாதர் சங்க வட்ட செயலாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். எடப்பாடி தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத்தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட குழுவை சேர்ந்த லோகநாதன், அமுதா, சிந்தாமணி, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல கெங்கவல்லி தாசில்தார் அலுவலக முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கெங்கவல்லி வட்டத்தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். செல்வராஜ், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கெங்கவல்லி தாலுகா செயலாளர் ஜோதிகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாஜலம், தாலுகா செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைவரும் ஊர்வலமாக வந்து கெங்கவல்லி துணை தாசில்தார் சேகரிடம் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story