ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யகோபால் நீர்வள பாதுகாப்பு கழக தலைவராக நியமனம் அரசு உத்தரவு


ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யகோபால் நீர்வள பாதுகாப்பு கழக தலைவராக நியமனம் அரசு உத்தரவு
x
தினத்தந்தி 13 Oct 2019 3:46 AM IST (Updated: 13 Oct 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.சத்யகோபால் தமிழ்நாடு நீர் வள பாதுகாப்பு கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.சத்யகோபால், தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் புனரமைப்பு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார். அவர் அந்தப் பதவியை ஏற்ற நாளில் இருந்து ஓராண்டு அந்தப் பணியில் நீடிப்பார்.

அவர் என்னென்ன பணிகளை கவனிக்க வேண்டும் என்பதற்கான ஆணையும் பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, இந்தக் கழகத்தின் கீழ் வரும் பாசன திட்டங்களின் அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு பணிகளை தயார் செய்வார். பொதுப்பணித் துறையின் கீழ் வரும் அனைத்து குடிமராமத்துப் பணிகளையும், தமிழ்நாடு நீர் வள மேம்பாட்டுப் பிரிவின் பணிகளையும் அவர் ஆய்வு செய்வார்.

அவருக்கு அகவிலைப்படி, பயணப்படி, வீட்டு வாடகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். அவர் தனது ஓய்வூதியத்தை முழுமையாகப் பெறலாம். பணியின்போது கடைசியாக பெற்ற சம்பளத்தின் அளவை மிகாதபடி, ஓய்வூதியம் மற்றும் இந்தப் பணிக்கான ஊதியம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story