ஆளுங்கட்சியினரின் மோதல் போக்கால் புதுச்சேரிக்கு மத்திய அரசின் சலுகைகள் கிடைக்கவில்லை - அன்பழகன் எம்.எல்.ஏ. சொல்கிறார்
ஆளுங்கட்சியினரின் மோதல் போக்கால் புதுச்சேரிக்கு மத்திய அரசின் எந்த சலுகைகளும் கிடைக்காமல் போனது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
காமராஜ் நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் ரங்கசாமியுடன் சென்று வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வாக்கு கேட்டுச் சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய அளவில் தேசிய கட்சியான காங்கிரஸ்தான் மாநிலத்திற்கு மாநிலம் முரண்பாடான கூட்டணி அமைத்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்துள்ளது. இதை முதல்-அமைச்சர் நாராயணசாமி உணர வேண்டும். அவர் கடந்த 3 ஆண்டுகளில் என்ன செய்துள்ளோம் என்று கூறி ஓட்டு சேகரிக்க தயாரா? புதுவை மாநிலத்திற்கு நான் முதல்-அமைச்சராக வந்ததால் தான் புதுச்சேரி காப்பாற்றப்பட்டது என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகின்றார். அது உண்மையில்லை.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. அந்த மாநில முதல்-அமைச்சர்கள் அவ்வப்போது மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்கு கூடுதல் நிதியையும், பல்வேறு திட்டங்களையும் பெற்று வருகின்றார்கள். ஆனால் நமது மாநில முதல்-அமைச்சர் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் மத்திய அரசின் எந்த சலுகையும் கிடைக்கவில்லை. கடன் தள்ளுபடி, மாநில அந்தஸ்து, மத்திய நிதி குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது, உள்ளிட்ட எதையும் பெற்றுத்தர முடியவில்லை. இவருடைய ஆட்சி காலம் என்பது புதுச்சேரியின் இருண்ட காலம்.
காமராஜ்நகர் தொகுதியில் நாங்கள் வாக்கு சேகரிக்க போகும் போது அங்கு செப்பனிடப்படாத சாலைகள் பற்றி மக்கள் கேட்கின்றனர். கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினை, சரியாக குப்பை வாராதது, சுத்தமான குடிநீர் வழங்காதது என 3 ஆண்டு காலமாக ஆளும் காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை.
ஆனால் குப்பைவரி, சொத்துவரி, மின்சாரவரி என பல்வேறு வரிகளை திணித்துள்ளனர். 40 மாதம் காங்கிரஸ் ஆட்சி செய்ததில் 18 மாதம் அரிசி வழங்கவில்லை. அதற்காக ஒதுக்கிய பணம் ரூ.260 கோடி எங்கே? அரிசி வழங்கமுடியவில்லை என்றால் அந்த பணத்தை வங்கி கணக்கில் போட்டிருக்கலாமே? இதனை தடுத்தது யார் ரங்கசாமியா? ரங்கசாமி நினைத்தால் உங்களால் ஒரு நாள் கூட ஆட்சியில் தொடர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story