வெங்கல் அருகே பெட்ரோல் நிலைய ஊழியர்களை மிரட்டி ரூ.1½ லட்சம் கொள்ளை
வெங்கல் அருகே பெட்ரோல் நிலைய ஊழியர்களை மிரட்டி ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
பெரியபாளையம்,
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ஏ.கே.மூர்த்தி (வயது 55). இவர் திருவள்ளூர் மாவட்டம் பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் பெட்ரோல் நிலையம் நடத்தி வருகிறார். இங்கு இரவு நேரத்தில் 4 ஊழியர்கள் காவலுக்கு தங்கியிருப்பர். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் நிலைய ஊழியர்களை மிரட்டி அலுவலக அறையை திறக்க செய்தனர்.
பின்னர், காவலுக்கு தங்கியிருந்த ஊழியர் முரளி என்பவரை மிரட்டி அங்கு இருந்த பீரோவை திறக்க செய்தனர். அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.
இந்த பெட்ரோல் நிலையம் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தியின் உறவினருக்கு சொந்தமானது ஆகும். கொள்ளை சம்பவம் நடைபெற்ற இந்த பெட்ரோல் நிலையத்தை ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story