மாவட்ட செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்; 2 பேர் சிக்கினர் + "||" + Seizure of sea cards attempted to smuggle into Sri Lanka; 2 people Trapped

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்; 2 பேர் சிக்கினர்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்; 2 பேர் சிக்கினர்
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம்,

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம், பாம்பனுக்கு இடைப்பட்ட தென்கடல் பகுதியில் நேற்று வனத்துறையினரும், வேட்டைதடுப்பு காவலர்களும் வனத்துறைக்கு சொந்தமான பைபர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது பாம்பன் கடல் பகுதியிலிருந்து மண்டபம் நோக்கி வந்த ஒரு மீன் பிடி படகை நிறுத்தி சோதனை செய்ய வனத்துறையினர் முயன்றனர். ஆனால் வனத்துறையினரை கண்டதும் படகில் உள்ளவர்கள் படகை நிறுத்தாமல் வேகமாக செல்ல முயன்றனர். வனத்துறையினர் அந்த படகை துரத்திப்பிடித்து படகில் இறங்கி சோதனை செய்தனர்.

இதில் அந்த படகில் 63 சாக்கு மூட்டைகளில் சுமார் 3200 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. அதைத் தொடர்ந்து கடல் அட்டைகள் மற்றும் அந்த மீன் பிடி படகை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடல் அட்டைகளுடன் வந்த வேதாளையை சேர்ந்த சாகுல்ஹமீது (வயது 31), கருப்பையா (45) ஆகிய 2 பேரையும் கைது செய்து மண்டபம் வனத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதி கடல் அட்டைகளுடன் பிடிபட்ட 2 பேரையும் ராமநாதபுரத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டதுடன் கடல் அட்டைகளையும் அழிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து கடல் அட்டைகள் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

விசாரணையில், கடல் அட்டைகள் அனைத்தையும் வேதாளை பகுதிக்கு கொண்டு சென்று அங்கு பதப்படுத்தி பேக்கிங் செய்து படகு மூலமாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.

வனத்துறையினரால் பறிமுதல் செய்பட்ட 3,200 கிலோ கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.4 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகி்றது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. இலங்கையின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார் - அமெரிக்க அரசு
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
3. இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்பு - பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கேவுக்கு மந்திரிகள் நெருக்கடி
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றார். பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கேவுக்கு மந்திரிகள் நெருக்கடி அளித்துள்ளனர்.
4. அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு
இலங்கையின் வடமேற்கு பகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையை பதம்பார்த்த ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.