அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 13 Oct 2019 10:45 PM GMT (Updated: 13 Oct 2019 7:58 PM GMT)

அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் என திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமை தாங்கினார். பின்னர் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. நமது வீட்டை சுற்றி தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். பயன்பாடற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்குவதால் தான் டெங்கு கொசு உற்பத்தியாகிறது.

தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

எனவே தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்திட சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அரசு மருத்துவக்கல்லூரி சித்தா பிரிவு டாக்டர் ஹேமா, துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் லூர்துபிரவீன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆயுதப்படை குடியிருப்பு வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு டெங்கு கொசு உற்பத்தியாகும் பொருட்கள் கண்டறியப்பட்டு அவைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

Next Story