மாவட்ட செய்திகள்

முத்துப்பேட்டை அருகே கடலில் மூழ்கி மீனவர் சாவு + "||" + Fisherman dies after drowning in sea near Muthupet

முத்துப்பேட்டை அருகே கடலில் மூழ்கி மீனவர் சாவு

முத்துப்பேட்டை அருகே கடலில் மூழ்கி மீனவர் சாவு
முத்துப்பேட்டை அருகே கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்தார்.
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் அரமங்காடு பகுதியை சேர்ந்தவர் வேதரத்தினம் (வயது 48). மீனவர். இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இவர் நேற்று அதிகாலை முத்துப்பேட்டை கடலில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு வலைவீசி மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கினார். அந்த வழியாக சென்ற மீனவர்கள் இதைபார்த்து, முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடலில் பிணமாக மிதந்த வேதரத்தினம் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹிட்லர் வளர்த்த முதலை சாவு
ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தாரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி மீன் பிடித்தபோது பரிதாபம்
தாரமங்கலம் அருகே மீன் பிடித்தபோது ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
3. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.
4. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: தீக்காயமடைந்த தொழிலாளி சாவு
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து தீப் பிடித்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
5. கோவையில் பரிதாபம் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு மேலும் 2 பேருக்கு சிகிச்சை
கோவையில் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.