கபிஸ்தலம் அருகே இருதரப்பினர் மோதல்; 3 பேர் காயம் வாலிபர் கைது-10 பேருக்கு வலைவீச்சு
கபிஸ்தலம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கபிஸ்தலம்,
கபிஸ்தலம் அருகே உள்ள எருமைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது26). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவருடைய தந்தை ராதாகிருஷ்ணன் எனது மகள் சாவில் மர்மம் உள்ளது என கபிஸ்தலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருதரப்பினர் மோதல்
இந்தநிலையில் பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும், பாக்கியலட்சுமி குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதில் இருதரப்பையும் சேர்ந்த மலர்கொடி, வள்ளி, திலீபன் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார், திலீபன், ராதாகிருஷ்ணன், சந்தோஷ்குமார்(35), புவனேஸ்வரன், சாந்தா, சீதாலட்சுமி, பாலகிருஷ்ணன், வேல்முருகன், பழனிவேல், மலர்கொடி, வள்ளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story