வனவிலங்குகள் நடமாட்டம் எதிரொலி: பியர்சோழா அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை


வனவிலங்குகள் நடமாட்டம் எதிரொலி: பியர்சோழா அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
x
தினத்தந்தி 14 Oct 2019 4:30 AM IST (Updated: 14 Oct 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக கொடைக்கானல் பியர்சோழா அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா இடங்கள் பெரும்பாலானவை அடர்ந்த வனப்பகுதியிலேயே உள்ளன. இதில் முக்கியமாக நகரை ஒட்டியுள்ள பியர்சோழா அருவி புகழ்பெற்றதாகும். இங்கு ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதுடன், புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள். தற்போது பெய்து வரும் மழை காரணமாக அருவியில் தண்ணீர் அதிகளவு விழுகிறது.

இந்தநிலையில் பியர்சோழா அருவி பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் அருவிக்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எனவே வனவிலங்குகளிடம் இருந்து சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து அருவியை பார்வையிட வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story