மாவட்ட செய்திகள்

கல்வி மாவட்ட அளவில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் + "||" + Sports Competitions for Elementary School Students

கல்வி மாவட்ட அளவில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

கல்வி மாவட்ட அளவில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
கல்வி மாவட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கீரமங்கலம்,

கல்வி மாவட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தொடக்கப்பள்ளி அளவில் விளையாட்டு போட்டிகள் என்பது அந்தந்த பள்ளிகளில் மட்டும் ஆண்டுவிழா காலங்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் பல பள்ளிகளில் ஆண்டுவிழாக்களே நடத்தப்படுவதில்லை என்பதால் தொடக்கப்பள்ளி மாணவர்களின் விளையாட்டு கனவாகவே போகிறது. இந்த நிலையில் தான் அலஞ்சிரங்காடு குருகுலம் அறக்கட்டளை சார்பில், அறக்கட்டளை வளாகத்தில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடத்த திட்டமிட்டனர். இதில் அரசு மற்றும் தனியார் என 15 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


குருகுலம் அறக்கட்டளை வளாகத்தில் நடந்த தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராசு தலைமை தாங்கினார். வக்கீல் தங்க.கோபிநாத் தேசிய கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஆசிரியர் ஜீவானந்தம் உள்பட ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினர். இதில் 250 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஜே.சி.ஐ. முன்னால் தலைவர்கள் பரிசு, சான்றிதழ்களைவழங்கினார்கள். அதிகமான போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்ற அரசர்குளம் தனியார் பள்ளிக்கு கலைஞர் முத்தமிழ் மன்ற தலைவர் மனோகரன் வெற்றி கோப்பை வழங்கினார். முடிவில் குருகுலம் சிவநேசன் நன்றி கூறினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இதேபோல தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் விளையாட்டு போட்டிகள், இலக்கிய போட்டிகளை நடத்துவோம் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘விளையாட்டு மூலம் கற்ற பாடத்தை கொரோனாவுக்கு எதிராக செயல்படுத்துங்கள்’ - ரவிசாஸ்திரி வேண்டுகோள்
விளையாட்டு மூலம் கற்ற பாடத்தை செயல்படுத்தி கொரோனாவை வீழ்த்துவோம் என்று ரவிசாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. எந்த ஒரு விளையாட்டு நடத்துவதற்கும் சாதகமான சூழ்நிலை இல்லை - கங்குலி பேட்டி
ஐ.பி.எல். உள்ளிட்ட எந்த விளையாட்டு நடத்துவதற்கும் சாதனமான சூழ்நிலை இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
3. அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் நாளை மறுநாள் நடக்கிறது
அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.
4. தஞ்சையில் உடல் திறனாய்வு போட்டிகள் 1,000 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
தஞ்சையில் நடந்த உடல் திறனாய்வு போட்டிகளில் 1,000 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
5. கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கரூரில், மகளிர் தினத்தை யொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.