கர்நாடகத்தில் மக்கள் தொகை அடிப்படையில் நடவடிக்கை: எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டில் மாற்றம் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


கர்நாடகத்தில் மக்கள் தொகை அடிப்படையில் நடவடிக்கை: எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டில் மாற்றம் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2019 11:00 PM GMT (Updated: 13 Oct 2019 9:59 PM GMT)

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர் (எஸ்.சி.), பழங்குடியினருக்கு (எஸ்.டி.) மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர் நா டக சமூக நலத் துறை சார் பில் மக ரிஷி வால் மீகி ஜெயந்தி மற் றும் விருது வழங் கும் விழா பெங் க ளூரு விதான சவு தா வில் உள்ள விருந் தி னர் அரங் கில் நேற்று நடை பெற் றது. இதில் முதல்-மந் திரி எடி யூ ரப்பா கலந்து கொண்டு, விருது வழங்கி பேசி ய தா வது:-

அடுத்த ஆண்டு (2020) பிப் ர வரி மாதத் தில் பட் ஜெட் தாக் கல் செய் யப் படும். இதில் வால் மீகி சமூ கத் திற்கு அதிக திட் டங் கள் அறி விக் கப் படும். அந்த சமூக மக் கள் கவு ர வ மாக வாழ தேவை யான திட் டங் கள் அமல் ப டுத் தப் படும். வால் மீகி, ராமா ய ணத்தை எழு தி னார். இது நூற் றுக் க ணக் கான மொழி களில் மொழி மாற் றம் செய் யப் பட் டது.

இதன் மூலம் வால் மீ கிக்கு உலக அள வில் அங் கீ கா ரம் கிடைத் தது. மனி த கு லத் தின் பிரச் சி னை க ளுக்கு இந்த ராமா ய ணத் தில் தீர்வு சொல் லப் பட் டுள் ளது. அனை வ ருக் கும் சம பங்கு, சம உரிமை, சாதி யற்ற சமு தா யத்தை உரு வாக்க முன் னு ரிமை அளித் தார். அவ ரது கொள் கை களை நாம் பின் பற் றி னால் தான் அது அர்த் தம் உள் ள தாக இருக் கும்.

சமு தா யம் பாது காப் பாக இருந் தால் தான் வளர்ச்சி சாத் தி யம். ஆதி தி ரா வி டர் மற் றும் பழங் கு டி யி ன ருக்கு மக் கள் தொகை அடிப் ப டை யில் இட ஒதுக் கீடு வழங்க ஓய் வு பெற்ற நீதி பதி நாக மோ கன் தாஸ் தலை மை யில் ஒரு குழு அமைக் கப் பட் டுள் ளது. அந்த குழு அறிக்கை வழங் கிய பிற கு இட ஒதுக் கீட்டை மாற்றி அமைக் கப் படும்.

இவ் வாறு எடியூரப்பா பேசினார்.

துணை முதல்-மந் திரி கோவிந்த் கார் ஜோள் பேசும் போது, "இட ஒதுக் கீட்டை மாற்றி அமைக்க குழு அமைக் கப் பட் டுள் ளது. அந்த குழு இன் னும் 2 மாதத் தில் அறிக்கை தாக் கல் செய் யும். அந்த அறிக்கை வந்த பிறகு இட ஒதுக் கீட் டில் மாற் றம் செய் யப் படும்.

கர் நா ட கத் தில் வெள் ளத் தால் 100-க்கும் மேற் பட்ட தாலு காக் களில் வெள் ளம் ஏற் பட்டு பெரிய பாதிப் பு கள் உண் டா கின. இத னால் குக் கி ரா மங் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டன. அந்த குக் கி ரா மங் களை மேம் ப டுத்த நட வ டிக்கை எடுக் கப் படும். ஆதி தி ரா வி டர் மற் றும் பழங் கு டி யின மக் க ளின் மேம் பாட் டிற் காக பட் ஜெட் டில் ரூ.30 ஆயி ரம் கோடி நிதி ஒதுக் கப் பட் டுள் ளது" என் றார்.

இந்த விழாவில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்க செய்தி தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நேற்று திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து பத்திரிகையாளர்கள் விதானசவுதா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட் டத் தில் ஈடு பட் ட னர். மேலும் முன் னாள் பிரதமர் தேவே கவுடா மற்றும் காங்கிரஸ் கட்சி, மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Next Story