அதிகாரிகளின் தொல்லையே எனது கணவர் தற்கொலைக்கு காரணம் - ரமேசின் மனைவி சவுமியா குற்றச்சாட்டு
வருமான வரித்துறையினர் தங்களது வீட்டில் சோதனை நடத்தினார்கள் என்றும், அதிகாரிகளின் தொல்லையே எனது கணவர் தற்கொலைக்கு காரணம் என்றும் ரமேசின் மனைவி சவுமியா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங் க ளூரு,
கர் நா டக காங் கி ரஸ் மூத்த தலை வ ரும், முன் னாள் துணை முதல்-மந் தி ரி யு மான பர மேஸ் வ ரி டம் உத வி யா ள ராக இருந் த வர் ரமேஷ். பர மேஸ் வர் வீட் டில் கடந்த 10-ந் தேதி யில் இருந்து நேற்று முன் தி னம் அதி காலை வரை வரு மான வரித் துறை அதி கா ரி கள் சோதனை நடத் தி னார் கள். பர மேஸ் வ ருக்கு சொந் த மான மருத் துவ கல் லூ ரி யில் 185 பேருக்கு சீட் வழங் கு வ தில் தலா ரூ.50 லட் சம் முதல் ரூ.65 லட் சம் வரை நன் கொடை பெற் ற தாக வந்த புகாரை தொடர்ந்து வரு மான வரித் து றை யி னர் சோதனை நடத்தி இருந் த னர். இது போல, பர மேஸ் வ ரின் உத வி யா ளர் ரமே சுக்கு சொந் த மான பெங் க ளூரு உல் லால் அருகே மல் ல த ஹள் ளி யில் உள்ள வீட் டி லும் சோதனை நடந் தி ருந் தது.
இந்த நிலை யில், வரு மான வரித் துறை அதி கா ரி கள் தனக்கு தொல்லை கொடுத் த தாக கூறி நேற்று முன் தி னம் கடி தம் எழுதி வைத் து விட்டு ஞான பா ரதி அருகே மரத் தில் தூக் குப் போட்டு ரமேஷ் தற் கொலை செய் தி ருந் தார். இது கு றித்து ஞான பா ரதி போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரித்து வரு கின் ற னர். ரமே சின் உடல் நேற்று முன் தி னம் நள் ளி ரவு விக் டோ ரியா ஆஸ் பத் தி ரி யில் பிரேத பரி சோ தனை செய் யப் பட்டு குடும் பத் தி ன ரி டம் ஒப் ப டைக் கப் பட் டது. அவ ரது உடல் சொந்த ஊரான ராம ந கர் மாவட் டம் மலே ஹள் ளிக்கு கொண்டு செல் லப் பட்டு இறுதி சடங்கு நடை பெற் றது.
இதற் கி டை யில், ரமேஷ் வீட் டில் சோதனை நடத் த வில்லை என் றும், பர மேஸ் வர் வீட் டில் வைத்து மட் டுமே ரமே சி டம் விசா ரணை நடத் தப் பட் ட தா க வும் வரு மான வரித் து றை யி னர் நேற்று முன் தி னம் தெரி வித் தி ருந் த னர். ஆனால் உல் லால் அருகே மல் ல ஹள் ளி யில் உள்ள ரமேஷ் வீட் டில் கடந்த 10-ந் தேதி மதி யம் வரு மான வரித் து றையை சேர்ந்த 4 அதி கா ரி கள் காரில் வரு வது, அவ ரது வீட் டுக் குள் செல் வது போன்ற வீடியோ காட் சி கள் தற் போது தொலைக் காட்சி சேனல் களில் வெளி யாகி உள் ளது.
வரு மான வரித் துறை அதி கா ரி கள் ரமேஷ் வீட் டில் சோதனை நடத் த வில்லை என்று கூறிய நிலை யில் தற் போது, அதி கா ரி கள் வந்து சென்ற வீடியோ காட் சி கள் வெளி யாகி இருப் பது பல் வேறு சந் தே கங் களை ஏற் ப டுத்தி உள் ளது. இது கு றித்து ரமே சின் மனைவி சவு மியா நிரு பர் க ளி டம் கூறி ய தா வது:-
எனது கண வர் சாவுக்கு வரு மான வரித் துறை அதி கா ரி கள் தொல் லையே கார ணம். எங் க ளது வீட் டில் கடந்த 10-ந் தேதி வரு மான வரித் துறை அதி கா ரி கள் 4 பேர் சோதனை நடத் தி னார் கள். அந்த அதி கா ரி கள் இந்தி, தெலுங்கு மொழி யில் பேசி னார் கள். எனது கண வ ரி டம் விசா ர ணை யும் நடத் தி னார் கள். கண வ ரி டம் இருந்து செல் போ னை யும் அதி கா ரி கள் வாங்கி வைத்து கொண் ட னர். வீட் டில் சோதனை நடத் தி விட்டு எனது கண வரை விசா ர ணைக் காக அதி கா ரி கள் அழைத்து சென் ற னர்.
அதி கா ரி கள் கேட்ட கேள் வி க ளுக்கு தன் னால் பதில் அளிக்க முடி ய வில்ைல என் றும், இந்த சோத னை யால் தனது மானம், மரி யாதை போய் விட் ட தா க வும் எனது கண வர் கூறி வந் தார். 10-ந் தேதி யில் இருந்தே மனம் உடைந்து காணப் பட் டார். வரு மான வரித் து றை யி னர் கொடுத்த நெருக் கடி, அவர் கள் கேட்ட கேள் வி க ளுக்கு பதில் சொல்ல முடி யா த தால் மனம் உடைந்து தற் கொலை முடிவை எடுத் துள் ளார்.
இவ் வாறு அவர் கூறி னார்.
இது கு றித்து ரமே சின் சகோ த ரர் சதீஷ் கூறு கை யில்,"என் னு டைய சகோ த ரர் தற் கொ லைக்கு வரு மான வரித் துறை அதி கா ரி களே முழு பொறுப்பு. அவர் கள் கொடுத்த தொல் லை யால் தான் தற் கொலை செய் துள் ளார்.
எனது சகோ த ரர் தற் கொ லைக்கு கார ண மான வரு மான வரித் துறை அதி கா ரி கள் மீது சட் டப் படி நட வ டிக்கை எடுக்க வேண் டும். எனது சகோ த ரர் எந்த வித மான சட் ட வி ரோத செயல் க ளி லும் ஈடு ப ட வில்லை," என் றார்.
இந்த நிலை யில், ரமேஷ் தற் கொலை குறித்த விசா ர ணையை ஞான பா ரதி போலீ சார் தீவி ரப் ப டுத்தி உள் ள னர். அதே நேரத் தில் ரமே சின் பிரேத பரி சோ தனை அறிக்கை கிடைத்த பின்பு அடுத் த கட்ட நட வ டிக்கை எடுக் க வும் முடிவு செய் துள் ள னர்.
ஏற் க னவே ரமேஷ் எழுதி வைத் தி ருந்த கடி தத் தில் வரு மான வரித் து றை யி ன ரின் விசா ர ணைக்கு பயந்து தற் கொலை செய் வ தாக கூறி இருந் தார்.
அவ்வாறு ரமேசுக்கு, அதிகாரிகள் நெருக்கடயோ, தொல்லையோ ெகாடுத்திருந்தால், அதுகுறித்து விசாரிக்க வருமான வரித்துறையினருக்கு நோட்டீசு அனுப்பவும் போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
Related Tags :
Next Story