‘‘சிவசேனாவுடன் பகை இல்லை, அமைதியை விரும்புகிறேன்’’ - நாராயண் ரானே சொல்கிறார்


‘‘சிவசேனாவுடன் பகை இல்லை, அமைதியை விரும்புகிறேன்’’ - நாராயண் ரானே சொல்கிறார்
x
தினத்தந்தி 14 Oct 2019 4:15 AM IST (Updated: 14 Oct 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

‘‘சிவசேனாவுடன் பகை இல்லை, அமைதியை விரும்புகிறேன்’’ என முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானே கூறியுள்ளார்.

மும்பை, 

சிந்துதுர்க் மாவட்டத்தில் கன்காவ்லி தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானேயின் மகன் நிதேஷ் ரானே பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதவிர சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் சிவசேனா- நாராயண் ரானே ஆதரவு பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சிந்துதுர்க் மாவட்டத்தை பொறுத்தவரை நாராயண் ரானே, சிவசேனா இடையே தான் போட்டி என இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே சிவசேனா கட்சி விளக்கம் அளித்து உள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து நாராயண் ரானே கூறியதாவது:-

சட்டசபை தேர்தல் சுமுகமாக முடிய வேண்டும் என விரும்புகிறேன். நான் யாருடனும் போட்டிப்போடவில்லை. தேர்தல் 2 கட்சி மற்றும் வேட்பாளர்கள் இடையேயானது. சிவசேனா உள்பட எந்த கட்சியுடனும் எனக்கு பகையில்லை. நான் யாருடனும் சண்டைபோட விரும்பவில்லை. அமைதியை விரும்புகிறேன். அதற்காக நான் அவர்களுடன் நட்பு பாராட்டுகிறேன் என அர்த்தமில்லை.

ஆனால் என்னுடனோ அல்லது எனது குடும்பத்தினர் இடமோ யாராவது வேண்டும் என்றே வம்பிழுத்தால் அவர்களுக்கு ரானே பாணியில் பதிலடி கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Next Story