மெரின்டிரைவ் கடற்கரையில் பட்னாவிசுடன் நடைபயிற்சி செய்த கோவா முதல்-மந்திரி
மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாக்கும் சேகரித்தார். அப்போது கோவா முதல்-மந்திரி பிரமோத் சவாந்தும் உடன் இருந்தார்.
மும்பை,
மராட்டியத்தில் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் கூட்டணியை ஆதரித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா மற்றும் மும்பையில் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.
இந்தநிலையில், நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பை மெரின்டிரைவ் கடற்கரையில் நடைபயிற்சி செய்தார். பின்னர் நடைபயணமாக வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். அப்போது அவருடன் கோவா முதல்-மந்திரி பிரமோத் சவாந்தும் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்டபடி வாக்கு சேகரித்தார்.
இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நடைபயிற்சியின் போது சிறந்த ஆற்றல் மற்றும் மராட்டிய மக்களிடம் இருந்து அற்புதமான வரவேற்பு கிடைத்ததாக, பதிவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story