தூத்துக்குடியில் பரபரப்பு, மினிமாரத்தான் போட்டியை தடுத்து நிறுத்திய போலீசார்


தூத்துக்குடியில் பரபரப்பு, மினிமாரத்தான் போட்டியை தடுத்து நிறுத்திய போலீசார்
x
தினத்தந்தி 14 Oct 2019 4:00 AM IST (Updated: 14 Oct 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மினிமாரத்தான் போட்டியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தூத்துக்குடியில் ஆரோக்கியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தூத்துக்குடியில் நேற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, போலீசில் அனுமதி பெறப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் வருகையையொட்டி மினிமாரத்தான் போட்டிக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் போட்டி நடைபெறுவதாக இருந்த முத்துநகர் கடற்கரைக்கு போட்டியாளர்கள் வரத்தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகா‌‌ஷ் தலைமையிலான போலீசார் மினிமாரத்தான் போட்டி நடத்தக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் முகைதீன் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மினிமாரத்தான் போட்டிக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு, நேற்று முன்தினம் திடீரென அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் வருகையால், போட்டிக்கு பாதுகாப்பு வழங்க போதிய போலீசார் இல்லை என்று கூறிய அதிகாரிகள், நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுப்பதற்காக ஏராளமான போலீசை குவித்தனர்.

முதல்-அமைச்சர் ஒரு மாவட்டத்துக்கு வரும்போது, மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்பது சட்டத்துக்கு புறம்பாக உள்ளது. போலீசார் நேர்மையான நிலைபாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Next Story