நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 14 Oct 2019 3:30 AM IST (Updated: 14 Oct 2019 5:46 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மேக கூட்டங்கள் ஒன்று சேர்ந்து லேசாக மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நெல்லையில் நேற்று காலை லேசான மழை பெய்தது. இதே போல் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம் -1, கருப்பாநதி -24, குண்டாறு -2, அடவிநயினார் -21, ஆய்குடி -3, பாளையங்கோட்டை -2, ராதாபுரம் -10, சங்கரன்கோவில் -15, சிவகிரி -1. ேநற்று மாலை 4 மணி நிலவரப்படி அம்பை -4, தென்காசி -13, நெல்லை -2.

Next Story