மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பிரசார இயக்கம்
மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் மன்னார்குடியில் பிரசார இயக்கம் நடைபெற்றது.
மன்னார்குடி,
மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் நாடு தழுவிய மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி மன்னார்குடி ஒன்றியத்தின் சார்பில் மன்னார்குடிசவளக்காரனில் பிரசார இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் திருஞானம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டு பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நிர்வாகிகள்
இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய செயலாளர் பாப்பையன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணை தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி மன்றமுன்னாள்தலைவர் ரவிச்சந்திரன், கிளை செயலாளர் ராஜேந்திரன், மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story