மாரிக்குளம் சுடுகாட்டில் 2-வது கட்டமாக சீரமைப்பு பணி
பொதுமக்கள் மாரிகுளம் சுடுகாடு சீரமைப்பு குழுவை ஏற்படுத்தி, கடந்த வாரம் முதல்கட்ட சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை பூக்காரத்தெரு பகுதியில் உள்ளது மாரிக்குளம் சுடுகாடு. இந்த சுடுகாடு தஞ்சை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சுடுகாட்டை 42, 43, 45, 46, 47, 48, 49, 50 ஆகிய 8 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் புதுப்பட்டினம், விளார், நாஞ்சிக்கோட்டை ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுடுகாட்டின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் உடைந்தும், சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள், புதர்கள் மண்டியும் காணப்பட்டது. இதனை சீர் செய்து, சுற்றுச்சுவர் அமைத்து, தண்ணீர் தொட்டி கட்டி, கேட் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். மேலும் இங்கு பழுதடைந்த கழிவறையை சீர் செய்து உயர்கோபுர மின் விளக்க அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாரிகுளம் சுடுகாடு சீரமைப்பு குழுவை ஏற்படுத்தி, கடந்த வாரம் முதல்கட்ட சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் 2-வது கட்டமாகவும் பொதுமக்கள் புதர், முட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story