மாமண்டூர் சுடுகாடு அருகே, தூக்கில் வியாபாரி பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை


மாமண்டூர் சுடுகாடு அருகே, தூக்கில் வியாபாரி பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 15 Oct 2019 4:30 AM IST (Updated: 15 Oct 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

மாமண்டூர் சுடுகாடு அருகே மரத்தில் தூக்கில் வியாபாரி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூசி, 

தூசியை அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வேணு (வயது 40), கீரை வியாபாரி. இவரது மனைவி கீதா (37). இவர்களுக்கு அஜித்குமார் (19) என்ற மகனும், லோகேஸ்வரி (18), தேவிப்பிரியா (15) ஆகிய மகள்களும் உள்ளனர். வேணு சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் ஊதாரிதனமாக செலவு செய்து சுற்றி வந்ததாகவும், இதனால் அவரது குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற வேணு பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேணு மாமண்டூர் சுடுகாடு அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ‌ஷாகின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கீதா கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேணுவை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story