காவேரிப்பாக்கம் அருகே, 155 யூனிட் மணல் பறிமுதல்
காவேரிப்பாக்கம் அருகே 155 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த பெண் அதிகாரிகளை கலெக்டர் பாராட்டினார்.
பனப்பாக்கம்,
காவேரிப்பாக்கம் மற்றும் வாலாஜா பகுதிகளில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. இங்கிருந்து சென்னைக்கு டிப்பர் லாரிகளில் மணல் கடத்தி செல்லப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் வந்தன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து வாலாஜா வருவாய் ஆய்வாளர் சோனியா, காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் திவ்யா ஆகியோர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஊழியர்கள் அடங்கிய குழுவினர் காவேரிப்பாக்கம், வாலாஜா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பாலாற்றில் இருந்து சென்னைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 155 யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.31 லட்சம் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட மணல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மணல் கடத்தி வந்து பதுக்கி ைவத்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அதிரடி சோதனையை நடத்திய வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் பாராட்டிந நினைவு பரிசு வழங்கி கூறுகையில்,் 36 மணி நேரம் ஓய்வின்றி சோதனை நடத்திய பெண் அதிகாரிகள் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டுக்களையும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய குழுவினருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் உள்ளனர்.
Related Tags :
Next Story