பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கு: ரூ.3,830 கோடி சொத்துகள் பறிமுதல்; அமலாக்கத்துறை நடவடிக்கை
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி.) கடந்த 2008-ம் ஆண்டு முதல் ரூ.4 ஆயிரத்து 355 கோடியே 46 லட்சம் அளவுக்கு முறைகேடு நடந்தது.
மும்பை,
முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பி.எம்.சி. வங்கி நிர்வாகிகள் மற்றும் எச்.டி.ஐ.எல். நிறுவன அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களை திரட்டுவதற்காக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பி.எம்.சி. வங்கி மற்றும் எச்.டி.ஐ.எல். நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது.
இந்தநிலையில், மோசடியில் தொடர்புடையவர்களின் ரூ.3 ஆயிரத்து 830 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது. அந்த சொத்துகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விரைவில் முடக்கப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story