இந்தோ அமெரிக்கன் சங்கம், அமெரிக்க தூதரகம் இணைந்து நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான விவாதப் போட்டி
இந்தோ அமெரிக்கன் சங்கம், அமெரிக்க தூதரகம் இணைந்து நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான விவாதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அமெரிக்க தூதர் சுழற்கோப்பையை வழங்கினார்.
சென்னை,
ஜனாதிபதி ஆட்சி முறை இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்புடையதா? ஏற்புடையது இல்லையா? என்ற தலைப்பில் இந்தோ அமெரிக்கன் சங்கம், அமெரிக்க தூதரகம் இணைந்து நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான ‘எலிஹு யேல்’ விவாதப் போட்டி சென்னை மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த தலா 2 பேர் கொண்ட 19 குழுவினர் பங்கேற்றனர். ஒவ்வொரு குழுவினரும் ஜனாதிபதி ஆட்சி முறை ஏற்புடையது என்றும், ஏற்புடையது இல்லை என்றும் விவாதம் செய்தனர்.
விவாதப்போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு தென்னிந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் ஜி.பர்ஜெஸ் தலைமை தாங்கினார். சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் லில்லியன் ஜாஸ்பர் முன்னிலை வகித்தார். இந்திய-அமெரிக்கச் சங்கத்தின் தலைவர் பிரசாத் டேவிட்ஸ் வரவேற்றார்.
விவாதப்போட்டியில் முதல் இடத்தை பெற்ற சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியை சேர்ந்த சபா தபசும் மற்றும் மயூரா வர்ஷினி ஆகியோரை கொண்ட குழுவினருக்கு அமெரிக்க தூதர் ராபர்ட் ஜி.பர்ஜெஸ் ‘எலிஹு யேல்’ சுழற்கோப்பையை மற்றும் பதக்கங்களை பரிசாக வழங்கினார். மாணவி சபா தபசுமுக்கு ‘வாதத்தில் சிறந்தவர்’ என்ற சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் அனைவருக்கும் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் லில்லியன் ஜாஸ்பர் சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் அமெரிக்க தூதர் ராபர்ட் ஜி.பர்ஜெஸ் பேசும்போது, “உலகின் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவும், உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் தங்கள் அரசியல் சாசனத்தை ‘மக்களாகிய நாங்கள்...’ என்று தான் தொடங்குகின்றன. இந்த அரசியல் சாசனங்கள் அடிப்படையில் விவாதப்போட்டி நடந்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. சட்டத்தின் ஆட்சியை மதிப்பது தான் இரு நாட்டு ஜனநாயகத்தின் ஒற்றுமையாகும். அந்த வகையில், இது போன்ற விவாத நிகழ்ச்சிகள் ஜனநாயகத்தை பலப்படுத்தும்” என்றார்.
விழாவில், இந்தோ அமெரிக்கன் சங்கத்தின் முன்னாள் தலைவர் மீரா ராமநாதன், ஆலோசகர் பி.முராரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story