அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவர், கண்டக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பள்ளிபாளையம் அரசு போக்குவரத்து பணிமனையில் வார விடுமுறை வழங்கக்கோரி டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கு இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அதிகாலையில் கிளம்பி செல்லும். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பஸ்கள் எதுவும் கிளம்பவில்லை.
பணிமனையில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்களுக்கு வாரவிடுமுறையினை எடுக்க முடியாமல் நிர்வாகம் பணி கொடுப்பதால், ஓய்வு இல்லாமல் பஸ்களை இயக்க முடியவில்லை. எனவே வார விடுமுறை வழங்கக்கோரியும், ஒரு டிரிப்புக்கும் அடுத்த டிரிப்புக்கும் இடைவெளி ஒதுக்கக்கோரியும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். சுமார் 200-க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
பரபரப்பு
இதுபற்றி தகவல் அறிந்த கிளை மேலாளர் மற்றும் பள்ளிபாளையம் போலீசார் அங்கு வந்து டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி பஸ்களை இயக்க வைத்தனர்.
இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related Tags :
Next Story