பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கில் பரபரப்பு தகவல்: மதம் மாறி நேர்முக உதவியாளரை திருமணம் செய்த முன்னாள் இயக்குனர் ; 9 வீடுகளை வாங்கி குவித்தார்
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி.) நடந்த ரூ.4 ஆயிரத்து 355 கோடி முறைகேடு தொடர்பாக மும்பை பொருளதார குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளன.
மும்பை,
பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கில் தொடர்புடைய எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர்கள் ராகேஷ் வாதாவன், அவரது மகன் சாரங் வாதாவன், பி.எம்.சி. வங்கி முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ், வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி தொடர்பாக பொருளதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், பி.எம்.சி. வங்கி முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமசுக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் சொந்தமாக புனே கோந்த்வாவில் 9 வீடுகள் மற்றும் ஒரு கடை என 10 சொத்துகள் இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த சொத்துகள் அனைத்தையும் வங்கி முறைகேடுகள் நடந்த காலக்கட்டத்தில் தான் வாங்கி உள்ளனர். அவரது இரண்டாவது மனைவி அவரிடம் நேர்முக உதவியாளராக இருந்தவர். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அவரை திருமணம் செய்வதற்காக ஜாய் தாமசும் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை ஜூனைத் கான் என மாற்றிக் கொண்டார். கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி அறிந்ததும் ஜாய் தாமசின் முதல் மனைவி விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தெரியவந்தது.
Related Tags :
Next Story