மாவட்டம் முழுவதும் 18 கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம் கலெக்டர் நடவடிக்கை
மாவட்டம் முழுவதும் 18 கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கொடைக்கானல், கூக்கால், வடகவுஞ்சி, மன்னவனூர், பூலத்தூர், பண்ணைக்காடு, பெரியூர், காமனூர், அடுக்கம் ஆகிய 9 ஊர்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள், பழனியை அடுத்த தாமரைக்குளம், ஒட்டன்சத்திரம் தாலுகா எல்லப்பட்டி, அப்பியம்பட்டி, நத்தம் தாலுகா செல்லப்பநாயக்கன்பட்டி, திண்டுக்கல்லை அடுத்த நீலமலைக்கோட்டை, வேடசந்தூர் தாலுகா கருங்கல், கொம்பேறிப்பட்டி, நத்தம் தாலுகா பூதக்குடி, நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டு ஆகிய பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் பழனி தாலுகா தாமரைக்குளம், ஒட்டன்சத்திரம் தாலுகா எல்லப்பட்டி, அப்பியம்பட்டி, நத்தம் தாலுகா செல்லப்பநாயக்கன்பட்டி, பூதக்குடி, திண்டுக்கல்லை அடுத்த நீலமலைக்கோட்டை, வேடசந்தூர் தாலுகா கருங்கல், கொம்பேறிப்பட்டி, நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டு ஆகிய 9 ஊர்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், கொடைக்கானல், கூக்கால், வடகவுஞ்சி, மன்னவனூர், பூலத்தூர், பண்ணைக்காடு, பெரியூர், காமனூர், அடுக்கம் ஆகிய கிராமங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இடமாறுதல் உத்தரவில் குறிப்பிடப்பட்ட தேதியில் அந்தந்த கிராமங்களுக்கு சென்று பொறுப்பேற்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story