திருவண்ணாமலையில் உலக திரைப்பட விழா - கலெக்டர் கந்தசாமி தொடங்கிவைத்தார்


திருவண்ணாமலையில் உலக திரைப்பட விழா - கலெக்டர் கந்தசாமி தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 17 Oct 2019 3:45 AM IST (Updated: 16 Oct 2019 10:22 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் உலக திரைப்பட விழாவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 6-வது உலக திரைப்பட விழா செங்கம் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று நடந்தது. தொடக்க விழாவுக்கு கவுரவ தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் எஸ்.குழந்தைவேலு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்து பேசினார்.

இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் கோபி நயினார், திரைக்கலைஞர் ஷீலா, திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார் திரைஇயக்க ஒருங்கிணைப்பாளர் களப்பிரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் பல்வேறு விருதுகளை குவித்த மலையாள மொழி படமான கும்பலங்கி நைட்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது.

இதில் தாசில்தார் கே.அமுல், வருவாய் ஆய்வாளர் ஆர்.காவேரி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சியினை மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா தொகுத்து வழங்கினார். முடிவில் மாவட்ட செயலாளர் மு.பாலாஜி நன்றி கூறினார். இந்த விழா வருகிற 20-ந் தேதி வரை உலகத் திரைப்படவிழா நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு விருதுகளை வாங்கிய புகழ்பெற்ற படங்கள் திரையிடப்படுகிறது.

Next Story