அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் நோய் தாக்கி பெண் யானை சாவு


அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் நோய் தாக்கி பெண் யானை சாவு
x
தினத்தந்தி 17 Oct 2019 4:15 AM IST (Updated: 16 Oct 2019 10:30 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் நோய் தாக்கி பெண் யானை இறந்தது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில், தட்டக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட கோவில்நத்தம் மணல்காடு என்ற இடத்தில் நேற்று சிலர் மாடு மேய்க்க சென்றார்கள். அப்போது ஒரு இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அங்கு சென்று பார்த்தார்கள். அப்போது ஒரு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே தட்டக்கரை வனச்சரகர்் பழனிச்சாமிக்கு அவர்கள் தகவல் கொடுத்தார்கள். அவர் இதுபற்றி மாவட்ட வனத்துறை அதிகாரி விஷ்னுஜூவிஸ்வநாதனிடம் கூறினார்.

இதையடுத்து விஷ்னுஜூவிஸ்வநாதனின் உத்தரவின் பேரில், சத்தி புலிகள் காப்பக கால்நடை டாக்டர் அசோகனுடன் வனச்சரகர் பழனிசாமி மற்றும் வனஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். இதைத்தொடர்ந்து யானையின் உடலை டாக்டர் அசோகன் பிரேத பரிசோதனை செய்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, 'இறந்தது சுமார் 7 வயதுடைய பெண் யானை. வயிற்று புண் நோயால் அவதிப்பட்டு இந்த யானை இறந்துள்ளது' என்றார்.

அதன்பின்னர் மற்ற விலங்குகளுக்கு உணவாக யானையின் உடல் அங்கேயே விடப்பட்டது.

Next Story