தெருவில் விளையாடிய 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தெருவில் விளையாடிய 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பெருந்துறை,
பெருந்துறை அருகே உள்ள சென்னியவலசு பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 52). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது தெருவில் 7 வயது மதிக்கத்தக்க அந்த பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது தங்கமுத்து மிட்டாய் தருகிறேன் என்று கூறி 2 சிறுமிகளையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சிலர் தங்கமுத்துவின் வீட்டுக்குள் சென்று பார்த்தார்கள். அப்போது அவர் 2 சிறுமிகளையும் பலாத்காரம் செய்துகொண்டிருந்தது தெரிந்தது.
உடனே சிறுமிகளை மீட்ட பொதுமக்கள் தங்கமுத்துவுக்கு தர்ம அடி கொடுத்தார்கள். பின்னர் இதுபற்றி பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தங்கமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 2 சிறுமிகளை பலாத்காரம் செய்தது தெரியவந்ததால் அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தார்கள்.
இதற்கிடையே தங்கமுத்துவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்துள்ளார்கள்.

Related Tags :
Next Story