மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2019 4:45 AM IST (Updated: 16 Oct 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகர்,

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசபந்து திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் லிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன், பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்.பி. அழகர்சாமி ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் காதர்மொய்தீன், ஒன்றிய செயலாளர் சக்கணன், மாவட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வெம்பக்கோட்டை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பொன்னையா ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.பி. லிங்கம் கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு துணை செயலாளர் பிரவைமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் சின்ன முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணா மடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் முன்னாள் எம்.பி. அழகர்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் திருமலை, ஜோதிலட்சுமி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வேதநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story