ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து; 1,000 கோழிகள் சாவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 1,000 கோழிகள் நசுங்கி செத்தன.
ஸ்ரீபெரும்புதூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் யாசின் (வயது 40). மினிலாரி டிரைவர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் கூட்டு சாலையில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரி டிரைவர் யாசின் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் மினி லாரியில் சிக்கி 1,000 கோழிகள் செத்தன.
இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கிறார்.

Related Tags :
Next Story