அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2019 3:00 AM IST (Updated: 17 Oct 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் கரூரான் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சக்கரவர்த்தி, அரூர் வட்ட தலைவர் செந்தில்குமார், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், இணை செயலாளர் தமிழ்அகமது, வட்ட செயலாளர் வேடியப்பன், வட்ட குழு வேலு, பாப்பிரெட்டிப்பட்டி வட்ட தலைவர் உதயகுமார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக அரசு அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு குறைதீர் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். குறைதீர் கூட்டத்தில் மருத்துவர்களை வரவழைத்து அடையாள சான்று, ரெயில் பாஸ் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

தாசில்தார் அலுவலகத்தில் உதவி தொகைக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் பட்டியலை தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

Next Story