கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், மாணவிகளுக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி


கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், மாணவிகளுக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி
x
தினத்தந்தி 17 Oct 2019 3:45 AM IST (Updated: 17 Oct 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், கடந்த 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை முதுகலை மாணவிகளுக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி என்னும் பிராமி எழுத்துக்கள் தொடங்கி வட்டெழுத்து, அண்மைக்கால கிரந்த எழுத்துக்கள், தமிழ் எண்கள் வரை அனைத்து எழுத்துக்களும் படிப்படியாய் வளர்ந்து இன்றைய வடிவத்தை அடைந்த வரலாற்றை அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

3-ம் நாளான நேற்று காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரமடம் சிவன் கோவிலுக்கு மாணவிகளை களப்பயணமாக அழைத்து சென்று அந்த கோவிலில் உள்ள குலோத்துங்க சோழன் கல்வெட்டை படியெடுத்து படிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் கோவில் கட்டடக்கலை, சிற்பங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் வரலாறு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி பெற்ற 35 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் உமாதேவி, அருங்காட்சியக பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் மற்றும் கோவில் குருக்கள் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story