பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியில் குடியிருப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்


பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியில் குடியிருப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Oct 2019 10:45 PM GMT (Updated: 16 Oct 2019 7:30 PM GMT)

பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியில் குடியிருப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டு பண்ணவயல் சாலையில் சிவக்கொல்லை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்த இடம் மராட்டிய மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து தங்களுக்கு சொந்தமானது. இதற்கான நீதி மன்ற உத்தரவுகள் தங்களிடம் உள்ளது என சிலர் கூறி குடியிருப்புகளை அகற்ற வலியுறுத்தினர். இதை கண்டித்து சிவக்கொல்லை குடியிருப்பு பகுதி மக்கள் குடியிருப்போர் நலச்சங்க தலைவரும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான வெள்ளைச்சாமி தலைமையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் கைவிரிப்பு

இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவை தங்களால் மீற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று சிவக்கொல்லை பகுதியில் உள்ள பிரச்சினைக்குரிய இடங்களை அளவீடு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

Next Story