சிட்கோவில் கொசு உற்பத்தி அதிகமாக இருந்ததால் பனியன் நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சிட்கோ தொழிற்பேட்டையில் டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்டதால் அங்குள்ள பனியன் நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
நல்லூர்,
திருப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிட்கோ பகுதிகளில் டெங்கு கொசு அதிகரித்து காய்ச்சல் பரவி வந்தது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது டெங்கு கொசுப்புழு உற்பத்தி அதிகரிக்க காரணமாக இருந்த சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள பனியன் நிறுவனத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டது. அந்த பனியன் நிறுவன கட்டிட உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் வெள்ளக்கரடு குடியிருப்பு பகுதிகளில் பழைய இரும்பு பொருட்கள் வைத்துள்ள குடோன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், 2 வாடகை வீட்டு உரிமையாளருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும் என்பது உள்பட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் அந்த பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கினர்.
மேலும், அப்பகுதியில் அதிக அளவில் வட மாநிலத்தினர் தங்கியிருந்து, சிட்கோவில் வேலை செய்து வருவதால் அவர்களுக்கு தெரியும் வகையில் இந்தியிலும் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story