சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு போலி பாஸ்போர்ட்டில் சென்ற பெண் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்


சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு போலி பாஸ்போர்ட்டில் சென்ற பெண் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்
x
தினத்தந்தி 17 Oct 2019 4:45 AM IST (Updated: 17 Oct 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு போலி பாஸ்போர்ட்டில் சென்ற இளம்பெண் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கடந்த 11-ந் தேதி சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானத்தில் இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் லிஷாந்தி (வயது 27) என்ற பெண் செல்ல இருந்தார். ஆனால் அவர் சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்யாமல் இருந்ததை கண்ட விமான நிறுவன ஊழியர்கள் மத்திய தொழிற்படை போலீசார் உதவியுடன் தேடினார்கள்.

விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, லிஷாந்தி சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறாமல், ஹாங்காங் செல்லும் விமானத்தில் சென்றதை கண்டுபிடித்தனர். உடனே இதுகுறித்து சென்னை விமான நிறுவன அதிகாரிகள், ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து, ஹாங்காங்கில் அந்த விமானம் தரையிறங்கியதும் அவரை சென்னைக்கு திருப்பி அனுப்பினார்கள். ஹாங்காங்கில் இருந்து விமானம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்ததும் லிஷாந்தியை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது, இலங்கையில் இருந்து சென்னை வந்ததான் மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் செல்ல விமான டிக்கெட் வைத்திருந்ததாகவும், ஆனால் சிங்கப்பூர் செல்வதற்கு சோதனை செய்து விட்டு, ஹாங்காங் டிக்கெட்டில் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். நியூசிலாந்தில் கணவர் இருப்பதால் அங்கு செல்ல இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கனடா நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் லிஷாந்தி சென்றது தெரியவந்தது.

இதற்காக இலங்கையில் உள்ள ஏஜெண்டிடம் ரூ.4 லட்சம் கொடுத்து போலி பாஸ்போர்ட்டை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து லிஷாந்தியை அதிகாரிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

Next Story